ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive : 'எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான்'... நடந்ததை விவரிக்கும் அன்வர் ராஜா

Exclusive : 'எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான்'... நடந்ததை விவரிக்கும் அன்வர் ராஜா

Exclusive : 'எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான்'... நடந்ததை விவரிக்கும் அன்வர் ராஜா

அதிமுக தொண்டர் ஒருவரும், அன்வர் ராஜாவும் போனில் பேசிய ஆடியோ 3 வாரங்களுக்கு முன்பபு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அன்றைக்கு நடந்த நிகழ்வுகளை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விவரித்துள்ளார்.

சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த புதன் அன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரங்கள் குறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வெல்லும் சொல் நிகழ்ச்சியில் அன்வர் ராஜா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஒரு போன் ஆடியோ ரிக்கார்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. அதில், நான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஒருமையில் பேசியதாக தகவல் இருந்தது. அதை குறிப்பிட்டு, ''ஒருமையில் பேசிய அன்வர் ராஜா கூட்டத்தில் பங்கேற்க கூடாது'', என்று சிவி சண்முகம் கூறினார்.

இந்த பிரச்சினையை பேசி தீர்த்து விட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அப்போது பதிலளித்தனர். ''நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று நான் கூட்டத்தில் தெரிவித்தேன். இது பற்றி எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் பேசி விட்டதாக கூட்டத்தில் கூறினேன்.

ஒரு அறையில் இருந்து பேசியதை பதிவு செய்து அதை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள். இதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது. இந்த ஆடியோ எப்படி வெளியே வந்தது என்று எனக்கே தெரியாது. எம்ஜிஆருடன் ஒப்பிட்டுதான் எடப்பாடி பழனிசாமியை நான் பேசியிருந்தேன். எனது உரையாடலை பதிவு செய்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். இது துரோகம். பெகாசஸ் ஒட்டுகேட்பு சம்பவம் போன எனக்கு நடந்திருக்கிறது.

இவ்வாறு அன்வர் ராஜா கூறினார். புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவரும், அன்வர் ராஜாவும் போனில் பேசிய ஆடியோ 3 வாரங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசிய நிலையில், இந்த விவகாரம் குறித்து அவரிடமே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக அன்வர் ராஜா கூறியுள்ளார்.

First published:

Tags: ADMK, Cm edapadi palanisami, EPS, Exclusive