Home /News /tamil-nadu /

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி- நலம் பெற அண்ணாமலை பிரார்த்தனை

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி- நலம் பெற அண்ணாமலை பிரார்த்தனை

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் நலம் பெற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாலையில் முடிவு வந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து,  சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் விரைவில் குணமடைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அண்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!’ என தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Annamalai, Corona, O Pannerselvam, OPS

    அடுத்த செய்தி