Home /News /tamil-nadu /

அதிமுக தேர்தல் : ஓபிஎஸ் - ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு

அதிமுக தேர்தல் : ஓபிஎஸ் - ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்கு மூலம் தேர்வு செய்யும் வகையில் விதிகள் திருத்தப்பட்டன.

    அதிமுக உட்கட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மனு வாங்க வந்த சிலரை தொண்டர்கள் விரட்டியடித்த சம்பவமும் அரங்கேறியது. நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், இருவரது மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தேர்வுக்குழு இன்று அறிவித்தது.

    Also Read : தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தகவல்

    இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து, சேலத்தில் எம்ஜிஆர் - ஜெயலலிதா மணிமண்டபம் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர். இதே போன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, OPS - EPS

    அடுத்த செய்தி