அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் நடப்பதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக செயற்குழு - பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்களின் வரைவு நகல் நேற்று நள்ளிரவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக தீர்மானக்குழு தயார் செய்த தீர்மானங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். ஒருங்கிணைப்பாளர் பதவி கட்சியின் முதன்மை பதவி என்பதால் ஓ.பன்னீர்செல்வத்திடம் முதற்கட்ட ஒப்புதல் வாங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணிக்குள்ளாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் வழங்கதாதல் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இபிஎஸ் எழுதிய கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம். எந்த பிரச்னையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் நிலவவில்லை, திட்டமிட்டபடி செயற்குழு - பொதுக்குழு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி எழுதிய பதில் கடிதத்தில் ஒற்றைத் தலைமை குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.