Home /News /tamil-nadu /

நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு நாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழ்நாடு தினம்

தமிழ்நாடு தினம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

    மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த தினமான இன்றுதான் தமிழ்நாடு நாள் என்று கூறியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இன்றுடன் 65 ஆண்டுகள் கடந்துள்ளது. ஆங்கிலேயே அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பும் மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்டே இன்றைய ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் இருந்தன. பின்னர்,  நவம்பர் 1, 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவை பிரிந்து சென்றன.

    இந்த நாளை, தங்கள் மாநிலம் உருவான நாளாக அந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. இதேபோல், தமிழ்நாடு நாளாகவும் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் இயற்றப்பட்ட ஜூலை 18ம் தேதிதான் தமிழ்நாடு தினம் என்றும் இது தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதனை அதிமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. நவம்பர் ஒன்றாம் தேதியான இன்றுதான் தமிழ்நாடு நாள் என்று கூறி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'நீலத் திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு!' என்று பாரதியாரால் பாடப்பட்ட நம் தமிழ்நாடு உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் 'தமிழ்நாடு தினத்தில்' வணங்குகிறேன்.

    இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை


    தமிழ் அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்ட நவம்பர் 1, தமிழ்நாடு தினம் நன்னாளில் 'தமிழ் கூறும் நல்லுலகம்' உருவாக காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் அவர்தம் மொழிப்பற்றையும் போற்றி வணங்குகிறேன்.

    மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நாளையே தனது அதிகார மமதையில் திமுக அரசு மாற்ற முயற்சிப்பதை புறந்தள்ளி. தமிழ் அறிஞர்களாலும், ஆர்வலர்களாலும் ஏற்றுக்கொள்ளபட்டு அம்மா அரசால் அறிவிக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடுவோம்” என்று  பதிவிட்டுள்ளார்.

    மேலும் படிக்க: மொழிவாரி மாநிலங்கள் பிறந்த தினம்: ஆந்திரா, கேரளா, கர்நாடகா உற்சாக கொண்டாட்டம்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Edappadi palanisamy, TamilNadu Day

    அடுத்த செய்தி