மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை!

மோடியின் அமைச்சரவையில் தேனி தொகுதி எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவிந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Web Desk | news18
Updated: May 30, 2019, 8:58 PM IST
மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை!
குடியரசுத் தலைவர் மாளிகை
Web Desk | news18
Updated: May 30, 2019, 8:58 PM IST
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் அ.தி.மு.கவைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றியைப் பிடித்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது. இன்று நடைபெற்ற பதவியேற்பு இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.

ரவிந்திர நாத்அதனைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, மோடியின் அமைச்சரவையில் தேனி தொகுதி எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவிந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புதிய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

Also see:

Loading...

First published: May 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...