அதிமுகவின் செல்வாக்கை குறைத்து எடைபோட முடியாது, பாஜகவால் இங்கு வேரூன்ற முடியாது - தொல்.திருமாவளவன் எம்.பி.,

Youtube Video

தொகுதிப் பங்கீடு என்பது, கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

 • Share this:
  வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் போட்டியிட்டால் அது கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியாக அமையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

  நியூஸ் 18 தொலைக்காட்சியில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், அதிமுகவிற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றார்.

  எதிர்வரும் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி இடையே தான் நேரடி மோதல் இருக்கும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் பாஜகவால் வேரூன்ற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  இணையதளம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சின்னம் ஒரு பொருட்டே கிடையாது என்பதால் வரும் தேர்தலிலும் சின்னத்தை பற்றி கவலைப்பட போவதில்லை என குறிப்பிட்டார். மேலும், தொகுதிப் பங்கீடு என்பது, கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

   
  First published: