அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக தலைமை அலுவலகம்

அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 • Share this:
  சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நேற்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஆறு தீர்மானங்கள்:

  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்

  மக்கள் படும் துயரங்களை மனதில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

  காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டுக்கான உரிமையை காக்க வேண்டும். மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்.

  சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத தி.மு.க அரசுக்கு கண்டனம்

  தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கபடும் என்ற வாக்குறுதியை தி.மு.க உடனே நிறைவேற்ற வேண்டும்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாகக் கொள்முதல் செய்யவேண்டும் என்று 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  Published by:Karthick S
  First published: