இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளன..

 • Share this:
  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. நேற்று விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடந்த நிலையில், இன்று இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்டுகின்றது.

  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இன்னு தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை. தமாகாவுடனாக பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  பாஜகவும், தேமுதிகவும் பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதிமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, விருப்பமனுக்களை அளித்தவர்களுக்கான நேர்காணலை முன்னதாகவும், விரைவாகவும் நடத்தியுள்ளது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஆலாசனை நடத்த இருக்கின்றனர். இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

  Must Read : அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?

   

  கூட்டத்தில்  வேட்பாளர் தேர்வு, வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தல், தேர்தல் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்