Home /News /tamil-nadu /

அதிமுக கூட்டத்தில் செல்போனுக்கு தடை: பங்கேற்காமல் வெளியேறிய மைத்ரேயன்

அதிமுக கூட்டத்தில் செல்போனுக்கு தடை: பங்கேற்காமல் வெளியேறிய மைத்ரேயன்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

AIADMK : ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் வெளியேறினார். 

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் காலை 10.30 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், வரும் 23ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாஜக, பாமக ஆகியவை தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிமுக அலுவலகம்


    மேலும், சசிகலா அதிமுக தலைமை ஏற்க வேண்டும் என தொண்டர்களின் ஒரு புறம் பேசி வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் சசிகலா என்ற பேச்சு அதிமுகவில் வாயப்பு இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    Must Read : அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க செயலி: தமிழக அரசு அறிமுகம்!

    பாஜக குறித்து அதிமுக நிர்வாகிகளிடையே முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய பேச்சுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, இன்றைய கூட்டத்தில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியேறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் கூட்டத்தை பங்கேற்காமல் வெளியேறியது உண்மைதான். இதற்கு முன்னதாக செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது முதன் முறையாக தற்பொழுது அனுமதிக்கப்படவில்லை தொலைபேசி இல்லாமல் மூன்று மணி நேரம் இருப்பது கடினம். செல்போன் கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை ‘ என தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam

    அடுத்த செய்தி