ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒற்றை தலைமை விவகாரம்: மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசுகிறது அதிமுக!

ஒற்றை தலைமை விவகாரம்: மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசுகிறது அதிமுக!

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி குறித்தும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரின் கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என அக்கட்சியின் இரு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், வரும் 12-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டுமென்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி குறித்தும், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோரின் கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Published by:Yuvaraj V
First published:

Tags: ADMK