நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க கேட்கவில்லை - மத்திய அமைச்சர் விளக்கம்

பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைக்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய அ.தி.மு.க கேட்கவில்லை - மத்திய அமைச்சர் விளக்கம்
பியூஷ் கோயல்
  • News18
  • Last Updated: April 17, 2019, 3:34 PM IST
  • Share this:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு எடுப்பார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் தமிழகப் பொறுப்பாளர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகை தந்தார். சென்னை டி.நகரிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ‘தமிழகம் இதுவரை கண்டிராத கூட்டணியை பா.ஜ.க அமைத்துள்ளது. பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைக்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க கோதாவரி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி நதி நீர் இணைப்புக்காக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.


வறுமையை ஒழிப்போம் என்று ராகுல் காந்தி மக்களை ஏமாற்றிவருகிறார். தி.மு.கவின் வேட்பாளர்கள் 2 ஜி மற்றும் தொலைத் தொடர்பு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டினோம். விமானத்தில் அறிவிப்பை, தமிழில் ஒளிபரப்பு செய்தோம். ரயில் டிக்கெட் பதிவை தமிழை கொண்டு வந்து தமிழ் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறோம்.

நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று காங்கிரஸ் கூறுவது வெற்றுவாக்குறுதி. நீட் தேர்வு தேவையில்லை என்று அ.தி.மு.க கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க கோரிக்கைவைத்தது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்தார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading