Home /News /tamil-nadu /

அதிமுக உட்கட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டம்: காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார்!

அதிமுக உட்கட்சி தேர்தலை சீர்குலைக்க திட்டம்: காவல்நிலையத்தில் ஜெயக்குமார் புகார்!

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் அல்லாதவர்கள், கழகத்தில்  இருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக விரோதிகள் வேட்புமனு தாக்கல்  செய்ய வேண்டும் என்ற போர்வையில் கட்சி அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட முயற்சிப்பதாக ஜெயக்குமார் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் போன்றோர் வேட்புமனு தாக்கல் என்ற பெயரில்  தலைமை அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முயற்சிப்பதாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன் அடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும், முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் மூன்று மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், அதிமுக  அமைப்பு தேர்தல் 3ம் தேதி முதல்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் விரட்டியடிப்பு!

    இன்று எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கழகத்தின்  அடிப்படை உறுப்பினர் அல்லாதவர்கள்,  கழகத்தில்  இருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக விரோதிகள் வேட்புமனு தாக்கல்  செய்ய வேண்டும் என்ற போர்வையில்,  தலைமைக் கழகத்தில்  நுழைந்து,  வன்முறையையும்  கலகத்தையும்  ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீல்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  செயல்பட  உள்ளதாக கேள்விப்படுகிறோம்.

    இது தொடர்பாக , எங்களுடைய மாவட்ட செயலாளர் கழகச் செயலாளர் திரு.ஆதிராஜாராம்,  இ2, இராயப்பேட்டை காவல் நிலையத்தில்  இன்று புகார் அளித்துள்ளார். ஆகவே, மேற்படி புகார் குறித்து  உரிய நடவடிக்கை  எடுத்து, கழக உறுப்பினர் அல்லாதவர்களும், ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டவர்களும்,  சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களும், தலைமை கழகத்திற்கு நுழைந்து கலகம் ஏற்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை மறைமுகமாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி


     
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Jayakumar

    அடுத்த செய்தி