ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்- ஆரம்பம் முதல் நடந்தது என்ன?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்- ஆரம்பம் முதல் நடந்தது என்ன?

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அதிமுகவில் பொதுசெயலாளார் என்ற பதவி கட்சியில் முழு அதிகாரம் உள்ள பதவியாக இருந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. ஓ.பன்னீசெல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மீண்டும் அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தன.

அணிகளின் இணைப்பு பிறகு கட்சியின் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுகுழுவை கூட்டி அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு பதில் கட்சி விதி 20 (அ) திருத்தம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்வுபொதுக்குழு ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டு அதிமுகவின் இப்போதைய குழுவால் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும் 2016ம் ஆண்டு பொதுக்குழு தீர்மானம் தான் செல்லத்தக்கது என்று தொடர்ந்த வழக்கில் விசாரணை 9ஆம் தேதி வரும் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது அதிமுக தலைமை.

2017 ஆம் ஆண்டு பொதுக் குழுவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் என சட்ட விதி 20 ( அ ) திருத்தியமைக்கப்பட்டது. ஆனால் நேற்றைய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மீண்டும் சட்டவிதி 20 ( அ ) மாற்றி அமைத்து, கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால் இனி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் ( Single Vote ) ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யும் வண்ணம் சட்ட விதிகளை மாற்றி அமைத்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இன்று இரு பதவிக்கான தேர்தல் தேதியை அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி  அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் அதிமுக சட்ட திட்ட விதி 30 பிரிவு 2ன் படி, அதிமுக உட்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறைக்கேற்ப உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் சனிக்கிழமை வரை இரண்டு நாட்கள் தாக்கல் செய்யலாம் என்றும் 4ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப்பெற 6ஆம்தேதி கடைசி நாள். தேர்தல் 7.12.2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தும் ஆணையர்களாக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பதவிகளுக்கும் சேர்த்து இருவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam