ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை நிறுத்தவேண்டும் - அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்

ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை நிறுத்தவேண்டும் - அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார்

அமைச்சர் ஜெயக்குமார்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 7 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் நடத்திய தீவிர சோதனையில் 428 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் காவலர்களின் தபால் ஓட்டுகள் பணம் கொடுத்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தி.மு.க மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க புகார் தெரிவித்துள்ளது.

அந்தப் புகாரில் கூகுள் பே உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ’பணநாயகத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு தி.மு.க பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் ஆகியவற்றோடு காட்பாடி, திருவண்ணாமலை மற்றும் திருச்சி மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நவீன முறையில் தி.மு.க பணப்பட்டுவாடா செய்வதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக தேர்தலை ரத்து செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக கூறினார். மேலும், குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி, செய்திகளை வெளியிடுவதால் அதனை தடை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளதாக, ஜெயக்குமார் தெரிவித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: