மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க கோரிக்கை

மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போட்டியிடும் தி.மு.க வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க கோரிக்கை

மாஃபா பாண்டியராஜன், நாசர்

ஆவடி தி.மு.க வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளை மீறியதால் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி பரமேஸ்வரி அ.தி.மு.கவினர் புகார் அளித்துள்ளனர்.

  • Share this:
அ.தி.மு.கவினர் அளித்த புகாரில், ‘சென்னை ஆவடி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக ஆவடி நாசர் களம் கான்கிறார். சென்ற 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வேட்பாளர் நாசர் அமைச்சர் பாண்டியராஜனிடம் படுதேல்வி அடைந்தார். இதனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆவடி தொகுதியில் மாஃபா பாண்டியராஜன் அதிமுக சார்பில் கள்ம் காண்பதால் தோல்வி  பயத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக வேட்பாளர் நாசர், அமைச்சர் பாண்டியராஜன் மீது அவதூறு பரப்பி பிரசாரம் செய்து வருகிறார்.

நீட் தேர்வில் இறந்த மாணவிகள் இறக்க மாஃபா பாண்டியராஜன் தான் காரணம் என கூறி பொது மக்களிடையே தவறான பிரசாரம் செய்து வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவரசன் தேர்தல் விதிமுறைகளை மீறி தி.மு.க வேட்பாளர் நாசர் நடப்பதாகவும் அவர்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தி.மு.க வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகுவிடம் புகார் அளித்தனர்.

புகாரளிக்கும் அ.தி.மு.கவினர்


மேலும் ஆவடி தேர்தல் பொறுப்பாளர் பரமேஷ்வரியிடம் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தபடும் என கூறினர்.

செய்தியாளர்: கண்ணியப்பன்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: