அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் வேலூர் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது - அதிமுக அறிக்கை

"ஜெயலலிதா விட்டுச்சென்ற வாக்கு விழுக்காடு சிந்தாமல், சிதறாமல் அப்படியே உள்ளது"

news18
Updated: August 10, 2019, 8:10 AM IST
அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் வேலூர் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது - அதிமுக அறிக்கை
கோப்புப்படம்
news18
Updated: August 10, 2019, 8:10 AM IST
வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு என்பது அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக அக்கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 4 லட்சத்து 76, ஆயிரத்து 199 வாக்குகளை பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவு அதிமுகவின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் தான் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.


அதிமுக தலைமையிலான அணிதான் வெற்றிக் கனியை பறிக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளதாகவும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கட்சியை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் இது அடங்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், ஜெயலலிதா விட்டுச்சென்ற வாக்கு விழுக்காடு சிந்தாமல், சிதறாமல் அப்படியே உள்ளது என்றும், வேலூர் தேர்தலில் அதிமுக-வுக்கு 46 புள்ளி 51 விழுக்காடு வாக்கு கிடைத்துள்ளதாகவும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

மேலும், வேலூர் தொகுதி தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

Loading...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...