அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வர வாய்ப்பு... வழிகாட்டுக்குழு அமைக்க ஒப்புதல்..

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வர வாய்ப்பு... வழிகாட்டுக்குழு அமைக்க ஒப்புதல்..

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

அதிமுக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும் முன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

  இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்களுடன் நேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க...கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை.. வேகமாக அதிகரித்து வரும் காய்கறி விலை..  இக்கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைப்பது குறித்தும், முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது பற்றியும் சுமூக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வழிகாட்டு குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார்?, அந்த குழுவுக்கு என்னென்ன அதிகாரம் இருக்கும் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vaijayanthi S
  First published: