ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - அதிமுக ட்வீட்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - அதிமுக ட்வீட்

மாதிரி படம்

மாதிரி படம்

அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது, இது அதிமுக பொதுச்செயலாளரும் விவசாயிகள் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என அதிமுக அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் இதற்கு முன் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து, இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கவேண்டும் என விவசாயிகளும் பல்வேறு அரசிலக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

மேலும், இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ. 5000 வழங்கவேண்டும் எனவும் முழு செங்கரும்பை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதற்கு பிறகு ட்விட்டரில் அதிமுக தலைமை கழகம், “பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு! இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திருக்கிம், கழக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி !!!” என பதிவிட்டிருந்தது.

First published:

Tags: CM MK Stalin, Pongal, Pongal 2023, Pongal festival, Pongal Gift, TN Govt