• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • அதிமுக எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி: கட்சியினருக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கட்டுப்பாடு!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி: கட்சியினருக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கட்டுப்பாடு!

அதிமு.க அலுவலகம்

அதிமு.க அலுவலகம்

நாம் எவ்வளவு எளிய பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், நமது கொள்கைப் பற்றாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களிடம் நாம் கற்ற பாடத்தாலும்தான் இவை எல்லாம் சாத்தியமாயிற்று.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கழகத்தின் நலன் கருதி, யார் கருத்து கூற விரும்பினாலும், அவர்களுக்கு செயற்குழு-பொதுக்குழு-ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதமாகிறது. எனவே ஒற்றைத் தலைமை தேவை என அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருவர் போர்க் கொடி தூக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

  அந்த அறிக்கையில், ‘அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆர் மன்றம் என்ற பல ஆண்டுகள் இயங்கி வந்த புரட்சித் தலைவரின் அன்புச் சகோதரர்கள் தமிழ்நாட்டை சூழ்ந்திருந்த சுயநல இருளில் இருந்து மக்களைக் காப்பாற்ற புரட்சித் தலைவரை தமிழ் மக்களுக்கான ஒளி விளக்காக அடையாளம் கண்டுகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு உருவாக்கிய இயக்கமே நம் உயிரினும் மேலான அதிமுக. 1972-ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது, அவருக்கு ராமனுக்கு உதவிய அணிலாக துணை நின்ற பலர் இன்று அந்த நாள் நினைவுகளை பசுமையாக இதயத்தில் கொண்டிருக்கிறோம்.

  எத்தனை, எத்தனை அடக்குமுறைகளையும், அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், வியர்வையாலும், உயிர் தியாகத்தாலும் இந்த இயக்கம் இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் வலியும், வேதனையும் அதே நேரத்தில் பெருமிதமும், ஆனந்தமும் உண்மையான கழகத் தொண்டன் ஒவ்வொருவர் நெஞ்சிலும் அலை, அலையாய் எழுகின்றன. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து தனது வாழ்வையே கழகத்துக்காவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணித்து அனைத்திந்திய அதிமுக ஆயிரம் காலத்து பயிர் என்பதை உறுதி செய்த ஜெயலலிதாவின் உழைப்பு நாம் எல்லாம் கண்கூடாகக் கண்டோம்.

  ஜெயலலிதாவின் அகால மரணம், கழக உடன்பிறப்புகளை அரசியல் அனாதைகளாக்கவிடும் என்று பலரும் பகற்கனவு கண்டுகொண்டிருந்த நேரத்தில் நாம் கழகத்தைக் காப்பாற்றினோம். எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலை வெற்றிச் சின்னத்தை நாம் மீட்டெடுத்தோம். நாடு போற்றும் நம் நல்லாட்சி இதோ நான்காம் ஆண்டில் வெற்றி நடை போடுகிறது. நாம் எவ்வளவு எளிய பின்னணியைக் கொண்டிருந்தபோதிலும், நமது கொள்கைப் பற்றாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களிடம் நாம் கற்ற பாடத்தாலும்தான் இவை எல்லாம் சாத்தியமாயிற்று. கடந்த சில நாள்களாக, கழக உடன்பிறப்புகள் சிலர் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், இனி என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுவரும் கருத்துகள் அவ்வளவு வரவேற்கத் தக்கவையாக இல்லை.

  கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் கழகத்தின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது என்பதையும், அந்த உணர்வுகளின் காரணமாகத்தான் இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், இடம், பொருள், ஏவல் அறிந்து நாம் செயல்படவேண்டும். ஊர் இரண்டுபட்டால் யாருக்குக் கொண்டாட்டம் என்பதை எல்லோரும் நன்கு அறிந்துவைத்திருக்கிறோம். கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. கழகத்தின் நலன் கருதி சில கருத்துகளை யார் கூற விரும்பினாலும், அதற்கென செயற்குழு, பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் என்று பல்வேறு வாய்ப்புகளும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see:

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: