ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் குறித்து 7-ம் தேதி அறிவிப்பு - கே.பி.முனுசாமி விளக்கம்

அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் குறித்து 7-ம் தேதி அறிவிப்பு - கே.பி.முனுசாமி விளக்கம்

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

ஓ பன்னீர் செல்வம் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)

அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வரும் 7-ம் தேதி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியைப் பிடிக்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துவந்தனர். அது பூதாகரமாக வெடிக்க கடந்த மாதம் 15-ம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், பிரச்சனைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தனர்.

  பின்னர், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய இ.பி.எஸ். தரப்பு மும்முரம் காட்டும் நிலையில், இரு அணிகள் ஒன்றிணைந்தபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதியான 11 பேர் கொண்டு வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டுமென ஓபிஎஸ் தரப்பு விரும்புகிறது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே அதிமுக செயற்குழு கூடியது. 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் செயற்குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  அதனால், யாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது என்று முடிவு செய்யமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடையே வாக்குவாதம் நீடித்ததால் செயற்குழுக் கூட்டம் 5 மணி நேரம் வரை நீடித்தது.

  கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர், ‘அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7-ம் தேதி ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிவிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: AIADMK