இந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்

இந்த சுவரை நாங்க தான் ரிசர்வ் செய்திருக்கிறோம்... கல்லூரி மாணவர்களுடன் மல்லுக்கட்டிய அதிமுகவினர்
சுவர்
  • Share this:
கட்சி விளம்பரத்துக்கு அரசு கலைக்கல்லூரி ஒன்றின் சுற்றுச் சுவரை பயன்படுத்த மாணவர்களுடன் அதிமுகவினர் போட்டி போட்டு வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி 1973ம் ஆண்டு வியாசர்பாடியில் தொடங்கப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் சுற்றுச்சுவர் முழுவதும் கட்சி விளம்பரங்கள் வரையப்பட்டும், நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டும் இருக்கும். அதேபோல் கல்லூரி வெளியே உள்ள நடைபாதையில் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பது, குப்பைகள் கொட்டப்படுவது என யாரும் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

இந்நிலையில், கல்லூரியில் முதுகலை சமூகப்பணி பயிலும் மாணவர்கள் சுற்றுச்சுவரை தூய்மைப்படுத்த முடிவு செய்தனர். கல்லூரி முதல்வர் ஒத்துழைப்புடன் மிகவும் மோசமாக இருந்த அந்த பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுச்சுவரில் வெள்ளையடித்தனர்.
ஆனால், அப்பகுதி அதிமுகவினர் கல்லூரி சுற்றுச்சுவரை விளம்பரம் செய்ய ரிசர்வ் செய்திருப்பதாகவும், கடந்த 14 ஆண்டுகளாக அந்த சுவரை தாங்கள் தான் பயன்படுத்தி வருவதாக கூறியதால் பிரச்சனை எழுந்தது. பின்னர், அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பேசி உள்ளனர். பின்னர், கல்லூரி முன்புர சுற்றுச்சுவரில் ஒரு பகுதியில் உள்ள 6 சுவர்களில் மாணவர்கள் 4 சுவரிலும், அதிமுக 2 சுவரிலும் வரைந்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சமூகப்பணித்துறையை சேர்ந்த 30 மாணவர்கள் இணைந்து கல்லூரி சுற்றுச்சுவர் முழுவதும் இரவு பகலாக 3டி வடிவில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். பெண்கள் நலன், சாலை பாதுகாப்பு, விவசாயத்தின் முக்கியம், தமிழ் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.பல்வேறு அரசியல் தலையீடுகள், பிரச்சனைகளை கடந்து, பயன்படுத்த முடியாமல் இருந்த பகுதியை பளிச் என அப்பகுதி மக்கள் வியக்கும் வகையில் மாணவர்கள் மாற்றி, முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

மேலும் படிக்க: ''பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடை சட்டத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது'' - உயர்நீதிமன்றம்
First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்