#BREAKING | மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

அதிமுக - பாமக இடையேயான ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

#BREAKING | மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரன்
  • News18
  • Last Updated: July 6, 2019, 12:18 PM IST
  • Share this:
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

மக்களவை தேர்தலில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை, திமுக ஒதுக்கியது.


திமுக சார்பில் வில்சன் மற்றும் சண்முகம் போட்டியிடுகின்றனர். மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார்.

அதிமுக - பாமக இடையேயான ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர். முகம்மது ஜான், சிறுபான்மையினர் பிரிவு இணைச்செயலாளராகவும், சந்திரசேகரன் மேட்டூர் நகரச் செயலாளராகவும் உள்ளனர்.

முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, தற்போதைய எம்.பி மைத்ரேயன், வளர்மதி, கோகுல இந்திரா, கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் என்று டஜன் தலைவர்களில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முகம்மது ஜான் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading