முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ’விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி.. நீங்கதான் என் உறவு..!’ - விஜயபாஸ்கர் ட்விட்டரில் உருக்கம்

’விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி.. நீங்கதான் என் உறவு..!’ - விஜயபாஸ்கர் ட்விட்டரில் உருக்கம்

விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர்.

ஏப்ரல் 6-ல் நீங்க குடும்பத்தோட வாங்க வந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் எப்பவும் உங்க விஜயபாஸ்கர்தான்.

  • Last Updated :

தமிழக தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதி மக்களுக்கு ட்விட்டரில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோயில், ‘நான் உங்கள் விஜயபாஸ்கர் பேசுறேன். ஏப்ரல் 6, நீங்க வாக்களிக்கவேண்டிய எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நல்ல நாள். இந்த விராலிமலை பூமிதான் நான் கும்பிடுற சாமி. விராலிமலை மக்கள்தான் என்னுடைய உறவு. உங்களுக்கு உழைக்கிறதுக்கு மட்டும்தான் இந்த உசுரு. மெழுகுவர்த்தியா உங்களுக்காக உருகி உருகி உழைச்சிக்கிட்டு இருக்கேன். கஜா, கொரோனா, இதுமட்டும் இல்லங்க இனி எந்த கஷ்டமும் உங்களுக்கு வராமல் ஒரு பாதுகாப்பு அரணாக நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். இப்ப மட்டும் இல்ல எப்பவோ என் வாழ்க்கையை உங்களுக்காக அர்ப்பணித்துவிட்டேன்.

என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை என் வாழ்க்கை என்பது உங்களுக்காகத்தான். ஏப்ரல் 6-ல் நீங்க குடும்பத்தோட வாங்க வந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். நான் இந்த மண்ணை நம்புகிறேன். இந்த மக்களை நம்புகிறேன். மக்களோட மனச நம்புகிறேன். உங்கள் பாதங்களை தொட்ட வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நான் எப்பவும் உங்க விஜயபாஸ்கர். நான் உங்க வீட்டு பிள்ளை” எனப் பேசியுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: ADMK, Election Campaign, TN Assembly Election 2021, Twitter, Vijaya Baskar, Viralimalai Constituency