ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டிட இன்று முதல் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் தலைமை கழகத்திலிருந்து விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 23.1.2023  திங்கட் கிழமை முதல் 26.1.2023  வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, விண்ணப்பக் கட்டனத் தொகையாக 15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாயை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும்” என  அறிவித்துள்ளார்.

அதிமுக அறிக்கை

எடப்பாடி பழனிசாமி அணி தனித்து போட்டியிட்டால், தங்கள் அணியும் தனித்து போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். பாஜக இதில் யாருக்கு ஆதரவு என இன்று அறிவிக்கப்படும் என அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

First published:

Tags: ADMK, AIADMK, Edappadi Palaniswami, Erode, Erode Bypoll, Erode East Constituency