ஜெயலலிதா கோவிலில் தீக்குளித்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு

கோப்புப் படம்

ஜெயலலிதா கோவில் மண்டபத்தில் தீக்குளித்த அதிமுக தொண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா தே.கல்லுப்பட்டி அருகே உள்ள சந்தையூரை சேர்ந்தவர் பழனிசாமி (57) கடந்த 14-ஆம் தேதி சந்தையூர் வாக்குச்சாவடி முகவர் பணிக்கு தன்னை சேர்க்கவில்லை என அதிமுக நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டார்.

  தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர் பணி தர அதிமுக நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த பழனிச்சாமி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோவிலில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உடலில் தீப்பிடித்ததோடு ஜெயலலிதாவின் சிலை அருகே மயங்கி விழுந்தார்.

  இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோவில் பழனிசாமி தீக்குளித்து உயிரிழந்த இச்சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் : சிவகுமார்

  மதுரை, திருமங்கலம்
  Published by:Sheik Hanifah
  First published: