தன்னை அரிவாளால் தாக்கிய கும்பலை, அதே அரிவாளால் திருப்பி வெட்டிய அதிமுக பிரமுகர்... பரபரப்பு காட்சிகள்...

Youtube Video

சென்னையடுத்த அயப்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரை சாலையில் ஒட ஒட துரத்தி அரிவாளால் வெட்டியுள்ளது ஒருகும்பல் , தன்னை தாக்கிய கும்பலிடம் இருந்து தப்பிக்க தாக்கிய கும்பலிடம் இருந்தே அரிவாளை பிடிங்கிய அதிமுக பிரமுகர் தன்னை தாக்கியவர்களை தாக்கியுள்ளார். சினிமாவை விஞ்சும் அந்த சம்பவத்தின் பகீர் காட்சி வெளியாகியுள்ளது.

 • Share this:
  சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் முன்னால் அதிமுக கவுன்சிலரான 47 வயது மூர்த்தி. இவருக்கு 41 வயதான மஞ்சுளா என்ற மனைவியும் , ஒருமகனும் மகளும் உள்ளனர். அதிமுகவின் வில்லிவாக்கம் மேற்கு ஒன்றிய துணை செயலாளராக பதவி வகித்து வரும் மூர்த்தி, பத்திரபதிவு எழுத்தராகவும், ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றார். திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு மூர்த்தியின் வீட்டிற்கு நான்கு பேர்கொண்ட கும்பல் திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளனர். வீட்டின் வாசலில் இருந்த மூர்த்தியின் மனைவி மஞ்சுளாவிடம் அருகில் இருக்கும், மரத்தின் அருகே காத்திருக்கிறோம் அண்ணனை வர சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.

  திருமண பத்திரிக்கையை பெறுவதற்காக மூர்த்தி சட்டையை மாட்டிக் கொண்டவாரே வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவரை பின் தொடர்ந்து வந்த ஒருநபர் திடிரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மூர்த்தியின் பின்கழுத்தில் வெட்டியுள்ளார்.

  வெட்டிய நபரை மூர்த்தி திரும்பிபார்க்கும் போதே மற்றொரு நபர் பக்கவாட்டில் இருந்து அரிவாளால் தாக்க வந்துள்ளார். அதற்குள் சுதாரித்த மூரத்தி தன்னை தீர்த்துகட்ட திட்டம் நடப்பதாக உணர்ந்து, ரத்தம் கொட்டிய நிலையிலும் கும்பலிடம் இருந்தே அரிவாளை பிடிங்கி தன்னை தாக்கிய கும்பலை ஓட ஓட விரட்டியுள்ளார். மூர்த்தியின் எதிர்தாக்குதலை தாக்குபிடிக்க முடியாக கொலைகார கும்பலில் மூன்றுபேர் தப்பியோடினர்.

  வெட்டவந்த கும்பலில் தன்னிடம் பணியாற்றும் பிரபாகரனும் இருந்ததால் அதிர்ச்சியடைந்த மூர்த்தி பிரபாகரனை துரத்திபிடித்து தற்காப்பிற்காக பிரபாகரனை அரிவாளால் வெட்டியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பத்து நிமிடத்திற்கு மேல் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  உடனே சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் படுகாயதடைந்த மூர்த்தியையும் பிரபாகரனையும் மீட்டனர். மூர்த்தி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாகரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

  இந்நிலையில் மூர்த்தியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற 19 வயதான ராஜூ , 23 வயதான விஜயகுமார், 23 வயதான முத்து ஆகிய மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைமுயற்சி சம்பவத்தின் பின்னணி தெரியவந்தது.

  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான விக்கி என்ற சிறுவனுக்கும், மூர்த்தியிடம் பணியாற்றும் 25 வயதான பிரபாகரனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

  பிரச்சனை ஒருகட்டத்தில் கோஷ்டி மோதலாக வெடித்து விக்கி தரப்பினர். பிரபாகரனையும் அவரது நண்பர் 24 வயதான அமிர்தராஜையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில் சிறையில் இருந்த இளைஞர்கள் அனைவரையும் ஜாமினில் எடுத்துள்ளார் மூர்த்தி. தன்னை வெட்டியவர்களை தன்னுடை முதலாளியான மூர்த்தியே ஜாமினில் எடுத்தது பிரபாகரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

  அதனால் மூர்த்தியை பழிதீர்க்க நேரம் பார்த்த பிரபாகரன் தனது நண்பர்களை உடன் சேர்த்துக்கொண்டு கொலைமுயற்சியில் ஈடுப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேர்மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் மூர்த்தி மீது தற்காப்பிற்காக தாக்குதல் வழக்கு பதிந்துள்ளார்.

  மேலும் படிக்க...உங்கள் தொகுதி: மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி அறிந்ததும் அறியாததும்

  அரிவாளால் தன்னை வெட்டிய கும்பலிடம் இருந்தே அரிவாளை பிடிங்கி தற்காப்பிற்காக மறுதாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வீடியோ     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: