EXCLUSIVE: சுபஸ்ரீ இறப்பிற்கு பேனர் காரணமில்லை: பேனர் வைத்த அதிமுக நிர்வாகி தடாலடி பேட்டி

Web Desk | news18
Updated: September 13, 2019, 5:43 PM IST
EXCLUSIVE: சுபஸ்ரீ இறப்பிற்கு பேனர் காரணமில்லை: பேனர் வைத்த அதிமுக நிர்வாகி தடாலடி பேட்டி
breaking
Web Desk | news18
Updated: September 13, 2019, 5:43 PM IST
சுபஸ்ரீ இறப்பிற்கு பேனர் காரணமில்லை என அதிமுக நிர்வாகி ஜெயகோபால் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்து வருகிறார் ஜெயகோபால். இவரது இல்ல திருமணத்திற்காக பள்ளிக்கரணை சாலையில் நேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனர்கள் இன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீயின் என்ற இளம்பெண் மீது விழுந்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ பின்னால் வந்த லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.


பள்ளிக்கரணை காவல்நிலையம் ஜெயகோபால் மீது வழக்கு பதிந்துள்ளது.  இந்நிலையில், சிசிடிவி காட்சிக்கு முரணாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் நியூஸ்18 செய்தியாளரிடம் விளக்கமளித்துள்ளார்.

அதில், பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழக்க வாய்ப்பே இல்லை என்று ஜெயகோபால் தெரிவித்துள்ளார்.

WATCH VIDEO:

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...