அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும், சசிகலா தினகரனும் இணைய வேண்டும்: ராம்தாஸ் அதாவ்லே

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும், சசிகலா தினகரனும் இணைய வேண்டும்: ராம்தாஸ் அதாவ்லே

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே

தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றி பெறும்

 • Share this:
  தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார்.

  அவர் மேலும் சசிகலா, தினகரனும் இணைய வேண்டும் என்று கூறினார்.

  நேற்று தமிழக சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியதாவது:

  மத்திய அரசின், 'ஜன் தன்' திட்டத்தில், இதுவரை, 41.79 கோடி வங்கி கணக்கு துவக்கப்பட்டு, ஒரு லட்சத்து, 37 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 1.11 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 2,865 கோடி ரூபாய் வங்கியில் உள்ளது. இதே போல, இலவச காஸ் வழங்கும் திட்டத்தில், எட்டு கோடிக்கும் அதிகமான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றி பெறும்; முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கனவு நிச்சயம் நிறைவேறும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க.,வுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும்.

  விவசாயிகளின் வருவாயை உயர்த்தவே, மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். தேவைக்கேற்ப இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, ஆலோசனை நடத்த முன் வர வேண்டும். இந்த ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  முன்னதாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை ஏன் பாலிவுட் பிரபலங்கள் கண்டிக்கவில்லை எனவே ஷூட்டிங்கை நிறுத்துவோம் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்த பாலிவுட் பிரபலங்களுக்கு ஆதரவாகப் பேசினார் அதவாலே.

  கடந்த பிப்ரவரி 16ம் தேதி அவர் நாம் இருவர் நமக்கு இருவர் என்று ராகுல் காந்தி கூறியதை கிண்டலடிக்குமாறு, ‘நாம் இருவர் நமக்கிருவர் என்ற பிரச்சாரம் முன்பு குடும்பக் கட்டுப்பாடு குறித்த பிரச்சாரமாக இருந்தது. இதை அவர் நடைமுறைப்படுத்த விரும்பினால் அவர் முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மகாத்மா காந்தியின் கனவான சாதியத்தை ஒழிக்க வேண்டும். அதை இளைஞர்களுக்கு தூண்டுகோலாக பயன்படுத்தலாம்’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: