முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

ஆளுநரின் தேநீர் விருந்து: அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் விருந்தில் பா.ஜ.க, பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

  • Last Updated :

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிககளுக்கு இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முதலில் தெரிவித்திருந்தது. மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு, ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல, தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தன. அதேபோல, ஆளும் தி.மு.கவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பா.ஜ.க சார்பில் வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல, மத்திய அமைச்சர் எல்.முருகனும் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம் வருகை தந்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றுள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்தைப் தி.மு.க புறக்கணித்தால் டீ செலவு மிச்சம் - அண்ணாமலை விமர்சனம்

top videos

    பா.ம.க சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பங்கேற்கவில்லை.

    First published:

    Tags: RN Ravi