தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க, பா.ஜ.க மீண்டும் பேச்சுவார்த்தை - கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்து?

தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க, பா.ஜ.க மீண்டும் பேச்சுவார்த்தை - கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்து?

எடப்பாடி பழனிசாமி, முருகன்(மாதிரிப் படம்)

சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்றது. 

 • Share this:
  தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர காட்டத் தொடங்கியுள்ளன. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதற்கிடையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.கவுடன் அ.தி.மு.க இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.

  முன்னதாக, நேற்றைக்கு முந்தைய தினம் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இந்தநிலையில், சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

  அ.தி.மு.க சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க சார்பில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, பா.ஜ.க தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: