சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி - ஜே.பி.நட்டா

Youtube Video

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து பாஜக போட்டியிடும் என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மதுரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் தமிழ் மொழி குறித்தும், திருக்குறள் பற்றியும் பேசி வருவதாக கூறினார். தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக ஒரு விரோத கட்சி என விமர்சித்த ஜே.பி.நட்டா, பாஜக அளித்த நெருக்கடியால்தான், திமுக கையில் வேலினை எடுத்துள்ளதாகவும் கூறினார். அதிமுக-வுடன் இணைந்து பாஜக போட்டியிடும் என்று அறிவித்த ஜே.பி.நட்டா, தேசிய நீரோட்டத்தில் தமிழகமும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

  முன்னதாக மதுரையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜே.பி.நட்டா, தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தார். பின்னர் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினருடன் ஆலோசனை நடத்திய அவர், சமூக வலைதளங்களில் பாஜகவின் தேர்தல் பரப்புரையை எடுத்து செல்வது பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

  மேலும் படிக்க... Mann Ki Baat | பிரதமர் நரேந்திர மோடி இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை

  பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் ஜே.பி.நட்டா-வை தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: