அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி

தமிழகத்தில் இனிவரும் தேர்தல்களிலும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தொடரும். மூன்றாவது முறையும் வெற்றிக் கனியைப் பறிப்போம் என்று துணை முதல்வரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி
ஓ.பன்னீர் செல்வம்
  • Share this:
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழக வந்துள்ளார். இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார். மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

அதனையடுத்து, 4.50 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித்ஷா அங்கு சென்றார். அங்கு சென்ற அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் உள்ளிட்ட பல திடங்களை அமித்ஷா தொடங்கி மற்றும் அடிக்கல் நாட்டினார்.

அதனையடுத்து, பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘மத்திய அரசின் பல சாதனைகளில் அங்கம் வகித்தவர் அமித் ஷா. நீர் மேலாண்மை மற்றும் ஆளுமையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2011 ஆண்டு முதல் தற்போது வரை தமிழக அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை வகிக்கிறது. அ.தி.மு.க அரசுக்கு தினந்தோறும் மக்களின் செல்வாக்கு அதிகமாவதை கண்டு எதிர்கட்சியினர் வேதனைப்படுகின்றனர்.


நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்திடவேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைக்கேற்ப, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதில் முன்னனியில் இருப்பதால்தான், மக்கள் எங்கள் பின்னால் இருக்கின்றனர். இனி வரும் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். மூன்றாவது முறையும் வெற்றிக்கனியை பறிப்போம்’ என்று தெரிவித்தார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading