முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி

எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி

எழுதாத பேனா எங்கு வைத்தால் என்ன? பேனா வைக்க வேண்டாம் என சொல்லவில்லை. கரையிலே அதை அமைக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் எனவும் இருகட்சிகளுக்கு இடையே எந்த நெருடலும் இல்லை எனவும் எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுகதான் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது.

பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை பல இடங்களில் வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஸ்டாலின் தனது தந்தைக்கு கடலிலே பேனா வைக்கிறார். எழுதாத பேனா எங்கு வைத்தால் என்ன? பேனா வைக்க வேண்டாம் என சொல்லவில்லை. கரையிலே அதை அமைக்கலாம்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவிற்கு யாரும் உதவவில்லை, அதிமுகதான் பல கட்சிகளை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது. இடைத்தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணி அமைக்கப்படும். இப்போது பாஜக எங்களோடுதான் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்” என கூறினார்.

First published:

Tags: AIADMK Alliance, BJP, EPS, Erode Bypoll, Erode East Constituency