ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓசி பஸ் விவகாரம் : பாட்டியை தூண்டி விட்டு அதிமுக வீடியோ எடுத்துள்ளது - திமுக நிர்வாகி குற்றச்சாட்டு

ஓசி பஸ் விவகாரம் : பாட்டியை தூண்டி விட்டு அதிமுக வீடியோ எடுத்துள்ளது - திமுக நிர்வாகி குற்றச்சாட்டு

கண்டக்டருடன் சண்டையிட்டு டிக்கெட் எடுக்கும் மூதாட்டி.

கண்டக்டருடன் சண்டையிட்டு டிக்கெட் எடுக்கும் மூதாட்டி.

அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தமிழ்நாடே ஓசியில் சென்றாலும் நான் ஓசியில் போகமாட்டேன் என்று கண்டக்டரிடம் அடம்பிடித்து டிக்கெட்டை வாங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பஸ்ஸில் இலவசமாக பயணம் செல்ல மாட்டேன் என்று கோவையை சேர்ந்த பாட்டி கண்டக்டரிடம் சண்டையிட்ட வீடியோ இன்று வைரலான நிலையில் இதன் பின்னணில் அதிமுக இருப்பதாக , திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதன் மூலமாக தங்களுக்கு மாதந்தோறும் பலநூறு ரூபாய் மிச்சம் ஆகுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    எனக்கு ஓட்டு போடவே இல்லை... இருந்தாலும் கடமையை செய்கிறேன்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

    இருப்பினும் பெண்களுக்கு போதிய இலவச பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் இந்த திட்டத்தில் காணப்படுகிறது. ஒட்டுமொத்த அளவில் தமிழக அரசின் பாராட்டைப் பெற்ற திட்டங்களில் ஒன்றாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமைந்துள்ளது.

    இதற்கிடையே, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடி, ஓசியில் பெண்கள் பயணம் செய்வதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

    இந்த நிலையில், அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தமிழ்நாடே ஓசியில் சென்றாலும் நான் ஓசியில் போகமாட்டேன் என்று கண்டக்டரிடம் அடம்பிடித்து டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

    ஆம்னி பேருந்து கட்டண குறைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

    இதற்கிடையே, அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரித்விராஜ் என்பவர், பக்கத்து வீட்டு பாட்டியை அழைத்துச் சென்று இந்த வீடியோவை பதிவாக்கி பரப்பியுள்ளதாக, திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்!’ என்று கூறியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Coimbatore