Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி அதிமுக தேர்தல் அணையத்தில் மனு

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி அதிமுக தேர்தல் அணையத்தில் மனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

வாக்குப்பதிவு பல்வேறு இடங்களில் வன்முறைகளோடு நடந்து முடிந்திருக்கிறது. முறைகேடு நடைபெற்ற வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்கு எண்ணும் நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்கின்ற அச்சத்தில் பெயரில் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்படவுள்ளன.

    வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.  இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரை சந்தித்து அதிமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் புகார் மனு அளித்தார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், தபால் வாக்குப்பதிவுகள் முதலில் எண்ணப்படும் அதற்குப் பிறகுதான் வார்டு வாக்குப்பதிவு எண்ணப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைய வாய்ப்பு மற்றும் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

    இதையும் படிங்க: வாக்குச்சாவடியில் பெண் போலீஸ் மொபைலை பறித்த திமுக பிரமுகர்... வீடியோ வெளியாகி பரபரப்பு


    கடைசி நேரத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வீணான குழப்பங்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இதை செய்ய வேண்டும் என மனுவாக கொடுத்திருக்கிறோம் தேர்தல் ஆணையரும் உறுதியாக செய்வதாக கூறி உள்ளார். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகக்குறைந்த அளவில்தான்  வாக்கு பதிவாகியுள்ளது.



    வாக்குப்பதிவு பல்வேறு இடங்களில் வன்முறைகளோடு நடந்து முடிந்திருக்கிறது. முறைகேடு நடைபெற்ற வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்கு எண்ணும் நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்கின்ற அச்சத்தில் பெயரில் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    மேலும் படிங்க: போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்து அதிமுக பெண் வேட்பாளரை தாக்கிய தி.மு.க-வினர்.. திண்டிவனத்தில் பரபரப்பு


    இதேபோல்,  தமிழகம் முழுக்க உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Local Body Election 2022

    அடுத்த செய்தி