அதிமுக வேட்பாளர் விருப்பமனு: தேதி விவரம் வெளியீடு

அதிமுக வேட்பாளர் விருப்பமனு: தேதி விவரம் வெளியீடு

அஇஅதிமுக அலுவலகம்

இம்மாதம் 24-ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 5 ஆம் தேதி வரையில், விருப்பமனுக்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பெறப்படும்.

  • Share this:
    சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்களின், விருப்ப மனுக்களைப் பெறும் தேதிகள் பற்றிய விவரங்களை அதிமுக வெளிட்டுள்ளது.

    அதன்படி, இம்மாதம் 24-ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 5 ஆம் தேதி வரையில், அதிமுக விருப்பமனுக்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும், தமிழகத்திற்கு 15 அயிரம் ரூபாயும், புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் 5 ஆயிரம் ரூபாயும், கேரள மாநிலத்தில் போட்டியிட விரும்புவோர் ரூ. 2000 விண்ணப்ப கட்டணம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Must Read: ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி மூவர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

     

    இது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையொப்பமிட்டு கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
    Published by:Suresh V
    First published: