நான்கு தொகுதி இடைத்தேர்தல்! விருப்பமனு விநியோகம் குறித்து அறிவித்த அ.தி.மு.க

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

news18
Updated: April 19, 2019, 5:16 PM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தல்! விருப்பமனு விநியோகம் குறித்து அறிவித்த அ.தி.மு.க
அதிமுக தலைமை அலுவலகம்
news18
Updated: April 19, 2019, 5:16 PM IST
நான்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான விருப்ப மனு விண்ணப்பங்களை ஏப்ரல் 21-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அ.தி.மு.க அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மேற்கூறிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு ஏப்ரல் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பத்துக்கான கட்டணமாக 25,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ம் தேதி மனுவை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Loading...
Also see:
First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...