தாம் எம்.ஜி.ஆரின் நீட்சி என கமல்ஹாசன் கூறுவது வேடிக்கையாக உள்ளது: கருத்து தெரிவித்த அதிமுகவினர்

தாம் எம்.ஜி.ஆரின் நீட்சி என கமல்ஹாசன் கூறுவது வேடிக்கையாக உள்ளது: கருத்து தெரிவித்த அதிமுகவினர்

மதுரையில் கமல்

தாம் எம்.ஜி.ஆரின் நீட்சி என கமல்ஹாசன் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக அதிமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் நான் என கூறினார்.

  கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு, அதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

  எம்.ஜி.ஆரின் நீட்சி என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிக் கொள்வது மாபெரும் தவறு என, மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

  கமலின் பேச்சால், அதிமுகவின் வாக்கு வங்கி சிதறிவிடும் என தோன்றவில்லை எனவும், கட்சி சாராத ஏழை மக்கள் மத்தியில் அரசியல் தொடர்பாக ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

  திரை நட்சத்திரங்கள் யாரும் ஒருபோதும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என பத்திரிகையாளர் ஷியாம் கூறியுள்ளார். ஏழைகள் மேல் கமல் ஹாசன் இரக்கம் கொண்டால் மட்டுமே அவர் எம்ஜிஆர் ஆக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையே தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் என்றும், தற்போதைய அரசியலில் எதையும் மாற்ற முடியாது என்பதால்தான், தாங்கள் மாற்று அரசியலை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க...அமமுக-வுக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு... மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரியில் மட்டும் டார்ச் லைட் பயன்படுத்த அனுமதி

  தந்தை எம்எல்ஏ, மகன் எம்.பி என ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டிய கமல், இவர்கள் பெண்களுக்கு எப்படி சம உரிமை வழங்குவார்கள் எனவும் வினவினார். விவசாயி என்ற அடையாளம் ஆண்களை மட்டுமின்றி, பெண்களையும் சாரும் என கமல்ஹாசன் குறிப்பிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: