புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை

புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை

புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி

கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய சிறிய கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது.

  • Share this:
    அதிமுக கூட்டணியில் இரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவுக்கு வருமென பா.ஜ.கவும், தேமுதிகவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்து தேர்தல் பணிகளை தொடங்க அதிமுகவும் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க., தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கூடுதல் தொகுதிகள் கேட்பதால், இந்த கூட்டணி உறுதி செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

    மேலும் படிக்க... எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

    இதற்கிடையே, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸில் அதிமுக சார்பில் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் அடங்கிய பேச்சுவார்த்தை குழுவுடன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையிலான குழுவும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையிலான குழுவும் பங்கேற்றன.

    பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேச்சுவார்த்தை முடிந்ததும் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,”கே.வி. குப்பம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் ஆகிய 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். கொடுப்பார்கள் என நம்புகிறோம். நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள். இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டுமென கேட்டுள்ளோம். அதிமுக தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்” என்று கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: