• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு எல்.முருகனின் பதில்!

அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு எல்.முருகனின் பதில்!

எல்.முருகன்

எல்.முருகன்

  • Share this:
    அதிமுக-பாஜக கூட்டணி நீடித்துக் கொண்டிருப்பதாகவும், இது வலிமையான கூட்டணி என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேசிய கல்வி கொள்கை வேண்டும் என 50 லட்சம் கையெழுத்துகள் போடப்பட்டுள்ளன என்றும், புதிய கல்வி கொள்கை ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், திமுக நடத்தும் கல்வி நிலையங்களில் மும்மொழி கொள்கை, நான்கு மொழி கொள்கை வரை உள்ளது என்றும், இதன் மூலம் திமுக இரட்டை வேடம் போடுவது உறுதியாகி இருக்கின்றது என்றும் முருகன் குற்றம் சாட்டினார்.

    அப்போது, கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், அதிமுக-பாஜக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கின்றது என்றும், எங்களின் கூட்டணி வலிமையான கூட்டணி என்றும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல், கூட்டணி தொடர்கின்றது என்பதை மட்டும் உறுதியாகக் கூறினார் எல்.முருகன்.

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியினருடன்தான், எங்கள் கூட்டணி இருக்கும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: