சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக-அமமுக தொண்டர்கள் கைகலப்பு... மண்டை உடைந்தது...

இந்த மோதலில் இரு கட்சிகளை சேர்ந்த ராமச்சந்திரன், கணேசன் ஆகிய இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. மோதலை படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

Web Desk | news18
Updated: July 11, 2019, 10:30 PM IST
சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக-அமமுக தொண்டர்கள் கைகலப்பு... மண்டை உடைந்தது...
அதிமுக - அமமுக சலசலப்பு
Web Desk | news18
Updated: July 11, 2019, 10:30 PM IST
பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக-அமமுகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் 262-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சிலைக்கு அமமுகவினர் முதலில் மாலை அணிவித்தனர்.

இதையடுத்து மாலை அணிவிக்க சென்ற அதிமுகவினருக்கும் - அமமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் இரு கட்சிகளை சேர்ந்த ராமச்சந்திரன், கணேசன் ஆகிய இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. மோதலை படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து அந்த பத்திரிகையாளரை, சக செய்தியாளர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also watch: 2019-ல் சர்ச்சை திரைப்படங்கள்! 

Loading...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...