ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா - அமைச்சர் ஜெயக்குமார் பதில்
ரஜினிகாந்த் | அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: August 15, 2019, 3:55 PM IST
  • Share this:
ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

சுந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் பொது விருந்தில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காகவே. மாவட்டங்கள் பிரிக்கப்படுவது மக்களுக்கு நல்ல விசயம். செவிகொடுத்து கேட்டு செவிசாய்க்கும் அரசு தமிழகத்தில் உள்ளது. அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கும். தி.மு.கவின் நினைப்பு பகல் கனவாகி வருகின்றது.


காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து கூடாது என்பதை ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார். இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் நல்ல கருத்தைத் தான் கூறியுள்ளார்.

இது தைரியமான எல்லோரும் பாரட்டக்கூடிய முடிவு. ரஜினிகாந்துடன் கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யவேண்டிய விஷயம்.” என்றார்.

வீடியோ பார்க்க: காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து!

Loading...

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...