முத்தலாக் மசோதாவில் இரட்டை நிலைப்பாடு! மாநிலங்களவையில் அ.தி.மு.க கடும் எதிர்ப்பு

முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் ரவிந்திரநாத் ஆதரவு தெரிவித்திருந்தார்.

news18
Updated: July 30, 2019, 4:32 PM IST
முத்தலாக் மசோதாவில் இரட்டை நிலைப்பாடு! மாநிலங்களவையில் அ.தி.மு.க கடும் எதிர்ப்பு
நவநீத கிருஷ்ணன்
news18
Updated: July 30, 2019, 4:32 PM IST
முத்தலாக் மசோதாவை சில பிரிவுகள் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் உள்ளது என்று அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி நவநீதிகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

மக்களவையில் கடந்த 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை இன்று கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகளான ஜனதா தளம், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முத்தலாக் மசோதாவுக்கு மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் ரவிந்திரநாத் ஆதரவு தெரிவித்திருந்தார். அந்த மசோதா குறித்து பேசிய அவர், ‘இந்த மசோதா, பெண்களுக்கு சம உரிமை வழங்கும்’ என்று பேசியிருந்தார்.


இந்தநிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன், ‘முத்தலாக் மசோதாவில் ஏற்றுக் கொள்ள முடியாத அம்சங்கள் பல உள்ளன. எனவே, முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’ என்று கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். முன்னதாக, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியினும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முத்தலாக் மசோதாவைத் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க கூட்டணி கட்சியான ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது.

Also see:

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...