ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும் - சி.ஆர்.சரஸ்வதி

மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும் - சி.ஆர்.சரஸ்வதி

சசிகலா

சசிகலா

மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வந்திருக்கும் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வரும் அவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்றார்.

அதேபோல் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய சென்ற வி.கே.சசிகலாவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது சசிகலாவை சந்தித்து ஆசி பெற்ற அம்முக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, மிக விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும் என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அனைவரும் ஒருங்கிணைந்து தீய சக்தி திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் சசிகலா ஆசை. இதனை புரிந்து கொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஒரு மனிதனுக்கு நன்றி முக்கியம் என்பதை கூட மறந்து விட்டு இன்றைக்கு துரோகத்தின் உச்சிக்கு சென்று எல்லாம் நான் நான் என்று நினைக்கிறார். அது மிகப்பெரிய தவறு.

அதற்குரிய பதிலை தமிழக வாக்காளப் பெருமக்கள் கொடுப்பார்கள்.ஆர்.கே.நகரில் குக்கருக்கு எப்படி வரவேற்பு இருந்ததோ அதேபோன்று தமிழகம் முழுவதும் இன்று பொதுமக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். குக்கருக்கு தான் தங்கள் வாக்கு என்று மகிழ்ச்சியோடு கூறுகின்றனர். அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தான் டிடிவி தினகரனை நிற்கச்சொல்லி ஆசைப்பட்டார். அதற்காகத்தான் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் நிற்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பர்கூர் முதல் ஆர்கே நகர் வரை பல்வேறு தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றார். அதைப் போன்று தான் டிடிவி தினகரன் நிற்கிறார்.அவருக்கு கோவில்பட்டி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள்மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்‌. இது காலத்தின் கட்டாயம்.மிகப்பெரிய பொறுப்பில் சசிகலா விரைவில் வருவார்

கோவில்பட்டி தொகுதியில் செய்த நல திட்டங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்த திட்டங்கள், அமைச்சர் செய்த திட்டங்கள் கிடையாதுதீர்ப்பு வந்ததும் சசிகலா கிளம்பி சென்றிருந்தால் இந்த ஆட்சி வந்திருக்காது. இவர்களெல்லாம் அமைச்சர்களாக இருந்திருப்பார்களா.

நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் விசுவாசம் எங்கே போய்விட்டது. ஏன் நன்றி மறந்தீர்கள்.ஏன் துரோகம் செய்தீர்கள்

நான்கு ஆண்டுகளாக ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்திருப்பது தான் இந்த அரசின் சாதனை. ரூ.1500 கொடுப்பதாக கூறுவது நடக்க முடியாத காரியம், ரூ.2500 பொங்கல் பரிசாக கொடுத்தது தேர்தலுக்காக. இந்தத் தொகையை கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கொடுத்திருக்கலாமே.

நான்கு ஆண்டுகளாக டெண்டர் விடுவதிலும், அதில் வரும் லாபத்துக்காக மட்டுமே இருந்தனர். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இது மக்களுக்கும் தெரியும். தற்போது சசிகலா ஆன்மீக பயணத்தினை மேற்கொண்டுள்ளார். விரைவில் சசிகலா அரசியல் பயணத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் பிரார்த்தனை. நிச்சயமாக அது நடக்கும்” இவ்வாறு சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: AMMK, Kovilpatti Constituency, TN Assembly Election 2021, VK Sasikala