அதிமுகவில் புதிய மாற்றங்கள்? - அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை

அதிமுகவின் முக்கியப் பொறுப்பாளர்கள் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதனால் கூடிய விரைவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் புதிய மாற்றங்கள்? - அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு  ஆலோசனை
அ.தி.மு.க தலைமைக் கழகம்
  • Share this:
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு
அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினர் திடீர் ஆலோசனையில் நடத்தினர்.

Also see:



4 மணி நேரம் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவில் கட்சி நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதலுக்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading