தொடங்கியது அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்! 4 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை

கட்சித் தலைமை சார்பில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

தொடங்கியது அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்! 4 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை
அதிமுக தலைமை அலுவலகம்
  • News18
  • Last Updated: June 12, 2019, 11:20 AM IST
  • Share this:
அ.தி.மு.க கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்துவதுடன், பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.கவை வழிநடத்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசினார்.

அவரைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பொதுக்குழு தீர்மானத்தின்படியே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருவதாகவும் அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கமளித்தார். சி.வி. சண்முகத்தின் கருத்தை மற்ற அமைச்சர்களும் ஆதரித்தனர். இவர்களுடைய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதனையடுத்து, கட்சித் தலைமை சார்பில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுலகத்தில் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்ததாக சபாநாயகரால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்புவிடுக்கப்படவில்லை. அதேபோல, ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாததால் அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், ஆகியோர் சொந்த காரணங்களால் பங்கேற்கவில்லை. கட்சி தலைமைக்கு முறைப்படி விளக்கம் அளித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 113 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிகிறது.

Also see:
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading