தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது - அ.தி.மு.க குற்றச்சாட்டு

ஓபிஎஸ்- இபிஎஸ்

பத்தாண்டுகள் தலை காட்டாத மின்வெட்டு தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுவாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

 • Share this:
  அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்த 1 மாதமே முடிந்த நிலையில், வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பெற்ற ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர்.

  ஜனநாயகத்தின் ஆணிவேரான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுக முழு வரம்பு மீறலை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் துணை கொண்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொய்வழக்கு போடப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரம் இருக்கையில் ஆளும்கட்சி அராஜகத்துக்கு துணைபோவதாகவும், இது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தலைகால் தெரியாமல் ஆட்டம் போடாமல் நல்லாட்சி நடத்தவும், வாக்களித்த மக்களுக்கு அடிப்படை கடமை செய்ய திமுக நினைவில் கொள்ள வேண்டும் என்றும் இ.பி.எஸ்.,ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
  Published by:Karthick S
  First published: