11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - திருப்புமுனையை ஏற்படுத்திய முதல்வரின் கடிதம்

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - திருப்புமுனையை ஏற்படுத்திய முதல்வரின் கடிதம்
ஓ பன்னீர் செல்வம் | முக ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 16, 2020, 7:48 AM IST
  • Share this:
ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்க செய்ய கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சபாநாயகரிடம் முதலமைச்சர் பழனிசாமி அளித்துள்ள விளக்கம் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்த போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ஓ. பன்னீர்செல்வம் மாஃபா பாண்டியராஜன் உட்பட11 எம்எல்ஏ-க்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

சபாநாயகர் தனபால்இதையடுத்து இந்த 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அப்போதையை அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் கடிதம் எழுதினர்.

இந்நிலையில் அண்மையில் சபாநாயகருக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதிய முதலமைச்சர் பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 11 எம்எல்ஏ-க்கள் தவிர்த்து, எஞ்சிய 122 பேருக்கு மட்டுமே கொறடா உத்தரவு அனுப்பப்பட்டதாகவும், அதனால் 11 பேர் மீது நடவடிக்கைக் வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதை மேற்கொள்காட்டி, புகார் அளித்த 6 பேரும் பதிலளிக்க கூறி, சட்டப்பேரவை செயலர் கடந்த 10-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

11 எம்எல்ஏ-க்களுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பேரவை சபாநாயகருக்கு முலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதம் திருப்பம் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also See:

ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ


வழக்கறிஞராக மாறிய சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம்First published: June 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading