முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..

திமுக ஆட்சியில் 10 மாத ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிவிப்புகள் அரசாணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் பட்டியிலிட்டார்.

திமுக ஆட்சியில் 10 மாத ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிவிப்புகள் அரசாணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் பட்டியிலிட்டார்.

திமுக ஆட்சியில் 10 மாத ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிவிப்புகள் அரசாணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் பட்டியிலிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

2022-23ம் ஆண்டுக்கான பொதுநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை 18 மற்றும் 19ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மூன்று நாட்களாக பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

சட்டப்பேரவைத் துளிகள் :

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டதொடர் சுமுகமான முறையில், உறுப்பினர்கள் வெளியேற்றம் இல்லாமால் நீண்ட விவாதங்களுடன் நடைபெற்றுள்ளது. 6 நாட்கள் நடந்த சட்டபேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி கூடியது. அன்றைய தினம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

21ம் தேதி முதல் நேற்று வரை பட்ஜெட் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். இறுதி நாளான இன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

பட்ஜெட் தாக்கல் அன்று அதிமுகவினர் மீதும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போடப்படுவதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் விருதுநகர் வேலூர் உள்ளிட்ட சட்ட ஒழுங்குப் பிரச்சனையை முன்னிறுத்தி அதற்கு பேச அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வெளிநடப்பு செய்த நிலையிலும், அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக வெளிநடப்பு ஏதும் செய்யவில்லை.

மேகதாது, சட்டம் ஒழுங்கு, தாலிக்கு தங்கம், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு ரூ.1000 அறிவித்தது உள்ளிட்ட விவகாரங்கள் பேரவையில் எதிரொலித்தது‌. அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் அறிவிக்கபட்ட அறிவிப்புகளின் நிலை திமுக தேர்தல் அறிக்கை நிலை நீண்ட விவாதத்திற்கு உள்ளானது.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 420 பக்கங்களை கொண்ட அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார்.

திமுக ஆட்சியில் 10 மாத ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அறிவிப்புகள் அரசாணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110விதியின் கீழ் பட்டியிலிட்டார்.

மேலும் சட்டப்பேரவையில் குடிசை மாற்று வாரியத்தை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயர்மாற்றம் சட்ட மசோதா, நிறைவேற்றப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல் 12.30 மணியளவில் முடிவடைந்தது.

தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

First published:

Tags: MK Stalin, TN Assembly